முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவாரூரில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை

திருவாரூரில் விவசாயம் பொய்த்துப் போனதால் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தற்போதைய செய்திகள்

திருவாரூரில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை

திருவாரூரில் விவசாயம் பொய்த்துப் போனதால் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:00 PM
பகிர்:

திருவாரூரில் விவசாயம் பொய்த்துப் போனதால் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் அருகே கடம்பங்குடியைச் சேர்ந்தவர் சக்திவேல் (30). இவருக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், காவிரியில் தண்ணீர் இன்றி, மழையும் பெய்யாமல், விவசாயம் பொய்த்து போனதால், மன வேதனை அடைந்ததாகவும், அண்மையில் தனது சகோதரிக்கு திருமண ஏற்பாடு செய்திருந்ததாகவும், விவசாயம் பாதிக்கப்பட்டதால் தேவையான பணம் இல்லாததால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

இதற்கிடையே நேற்று இரவு பூச்சி மருந்தைக் குடித்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சக்திசேல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குடவாசல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சக்திவேல் எம்.ஏ. படித்தவர். திருமணம் ஆகாதவர்.

முழு கட்டுரையைப் படிக்க →