முகப்பு
தற்போதைய செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுவன் சாவு: மூவர் காயம்

அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம்.

தற்போதைய செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுவன் சாவு: மூவர் காயம்

அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 10 வயது சிறுவன் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த மேலும் மூவர் காயம் அடைந்தனர்.சிவகாசி அருகேயுள்ள விளாம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (37). இவர் இங்கு மளிகைக் கடை வைத்துள்ளார். இவர் தனது மனைவி தாமரைச்செல்வி (32), மகன் தங்க விக்ரம் (10), மகள் விஜய அபிநயா (7) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்தார். சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் பூவநாதபுரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில் தங்க விக்ரம் உயிரிழந்தார். மேலும் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த முருகன் மற்றும் அதில் வந்த தாமரைச்செல்வி, விஜய அபிநயா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →