தேனி அருகே பஸ்-ஜீப் மோதல்: 4 பேர் பலி
தேனி, பிப்.21: தேனி அருகே பழனிச்செட்டிப்பட்டி என்னும் இடத்தில் அரசு பஸ்ஸும் ஜீப்பும் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர், கம்பத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது. எதிரே உசிலம்பட்டியில்
தேனி, பிப்.21: தேனி அருகே பழனிச்செட்டிப்பட்டி என்னும் இடத்தில் அரசு பஸ்ஸும் ஜீப்பும் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்,
கம்பத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது. எதிரே உசிலம்பட்டியில் இருந்து ஆட்களை ஏற்றிக் கொண்டு கம்பம் நோக்கி ஜீப் ஒன்று வந்து கொண்டிருந்தது. தேனி மாவட்டம் பழனிச்செட்டிப் பட்டி என்னும் இடத்தில் வந்த போது, பஸ்ஸும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.