மதுரை அருகே கல்குவாரி குட்டையில் விழுந்து 2 சிறுவர்கள் பலி
மேலூர், ஜூலை 4: மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஒத்தக்கடை பகுதியில் திருவிழாவுக்கு வந்த சிறுவர்கள் 2 பேர் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர். ஒத்தக்கடை வீரகாளியம்மன் கோயில் திருவிழாவுக்கு பொள்ளாச்சி
மேலூர், ஜூலை 4: மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஒத்தக்கடை பகுதியில் திருவிழாவுக்கு வந்த சிறுவர்கள் 2 பேர் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஒத்தக்கடை வீரகாளியம்மன் கோயில் திருவிழாவுக்கு பொள்ளாச்சி காளிபாளையத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் விஷ்ணு (17) மற்றும் நரசிங்கம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் 7ம் வகுப்பு மாணவர் ஐயப்பன் (11) இருவரும் அங்குள்ளவர்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்துள்ளனர். இன்று காலை இருவரும் அருகில் உள்ள குவாரியில் தேங்கிய குட்டையில் குளிக்கச் சென்றார்கள். அப்போது தேங்கிய நீரில் தவறி விழுந்து இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து ஒத்தக்கடை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.