முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்து : 68 பேர் காயம்

சிதம்பரம், ஜூலை 11 : சிதம்பரம் அருகே கொள்ளிடக்கரைப் பகுதியில் புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் இன்று காலை பருத்திக்குடியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்த மினி பேருந்து கவிழ்

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

சிதம்பரம், ஜூலை 11 : சிதம்பரம் அருகே கொள்ளிடக்கரைப் பகுதியில் புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் இன்று காலை பருத்திக்குடியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்த மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 68 பேரும் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும், அண்ணாமலை ராஜா முத்தையா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், கோட்டாட்சியர் எம். இந்துமதி ஆகியோர் சம்பவ இடத்துக்கும், அரசு மருத்துவமனைக்கும் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments