முகப்பு
தற்போதைய செய்திகள்

தேர்வில் தவறியதாக வந்த தவறான தகவல்: மாணவி தீயிட்டுத் தற்கொலை

திண்டுக்கல், ஜூன் 4: பத்தாம் வகுப்புத் தேர்வில் தவறிவிட்டதாக வந்த தவறான தகவலால் மன உளைச்சல் அடைந்த மாணவி, தீயிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த நாராயணன் - முருகம்மா

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:38 PM
பகிர்:

திண்டுக்கல், ஜூன் 4: பத்தாம் வகுப்புத் தேர்வில் தவறிவிட்டதாக வந்த தவறான தகவலால் மன உளைச்சல் அடைந்த மாணவி, தீயிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த நாராயணன் - முருகம்மாள் தம்பதியின் மகள் காயத்ரி. திண்டுக்கல் அரசுப் பள்ளியில் படித்து வந்த இவர், 10ம் வகுப்புத் தேர்வு எழுதி முடிவுக்காகக் காத்திருந்தார். இன்று முடிவுகள் வெளியானதும், அவர் கணிதத்தில் 16 மதிப்பெண்கள் பெற்று தோல்வியைத் தழுவியதாக வந்த தகவலால் மன உளைச்சல் அடைந்து, மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதே நேரம், அவரது தாயார் இண்டர்நெட் மையத்துக்குச் சென்று அவரது மதிப்பெண்களைக் குறித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். அப்போது வீட்டில் இருந்து புகையாக வரவே, அதிர்ச்சி அடைந்து வீட்டைத் திறந்து பார்த்தார். அப்போது மகள் தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. இதனைக் கண்டு அவர் கதறி அழுதார்.

அந்தப் பெண், 49,45,37,56,43 என மொத்தம் 230 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். இடையில் வந்த தவறான தகவலால் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments