சாதிச் சான்றிதழ் கோரி மலைவாழ் மக்கள் போராட்டம்
சேலம், ஜூன் 11: சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் செங்காட்டூர், பூவனூர், அரமனூர், கொட்டாயூர், மூக்கனூர், கத்திரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்கள், த
சேலம், ஜூன் 11: சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் செங்காட்டூர், பூவனூர், அரமனூர், கொட்டாயூர், மூக்கனூர், கத்திரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்கள், தமிழ்நாடு இந்து மலையாளி (எஸ்.டி.) விவசாய முன்னேற்ற சமூக சங்க நிர்வாகிகள், பள்ளிகளில் படிக்கும் தங்களது குழந்தைகள் உள்ளிட்டோருடன் ஆட்சியர் அலுவலகத்தில் சாதிச் சான்றிதழ் கோரி போராட்டம் நடத்தினர்.
சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்படுவதாகக் கூறி மலைவாழ் மக்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தினைத் தொடர்ந்து, விரைவில் சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். இதனை அடுத்து மலைவாழ் மக்களை போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.