திண்டுக்கல்லில் பெண்ணிடமிருந்து 5 பவுன் நகை பறிப்பு
திண்டுக்கல், மார்ச் 10: திண்டுக்கல்லில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 5 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. திண்
திண்டுக்கல், மார்ச் 10: திண்டுக்கல்லில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 5 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 80 அடி சாலையை அடுத்துள்ள வள்ளலார் நகரைச் சேர்ந்த சாக்கு வியாபாரி கிருஷ்ணன். இவரது மனைவி கீதா. சனிக்கிழமை குழந்தைகளுடன் வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர் இருவர் கீதா கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம். இது குறித்து நகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.