வேடசந்தூரில் மரக்கடை அதிபர் படுகொலை
திண்டுக்கல், மே 30: வேடசந்தூரில் மரக்கடை அதிபரை நள்ளிரவில் மர்மநபர் கொலை செய்துவிட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் கோபாலசமுத்திரம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (50). இவர
திண்டுக்கல், மே 30: வேடசந்தூரில் மரக்கடை அதிபரை நள்ளிரவில் மர்மநபர் கொலை செய்துவிட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் கோபாலசமுத்திரம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (50). இவர் திண்டுக்கல் மறறும் வேடசந்தூரில் மரக்கடைகளை நடத்தி வந்தார். இவருக்கு 2 மனைவி. இதில் முதல் மனைவி மீனாட்சிக்கு பெருமாள்சாமி என்ற மகனும், விஜயா என்ற மகளும் உள்ளனர். இரண்டாவது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இந்நிலையில் ராமசாமி திண்டுக்கல்லில் வசித்து வந்தார்.
செவ்வாய்க் கிழமை பேருந்து நிலையம் அருகே உள்ள தனது மரக்கடைக்கு வந்தவர் இரவில் கடையிலேயே தங்கிவிட்டார். அந்த சமயம் யாரோ இவரது கழுத்தை அறுத்து இவர் அணிந்திருந்த 3பவுன் மோதிரத்தை திருடிச் சென்றதாகத் தெரிகிறது. ஆனால் கையில் அவர் அணிந்திருந்த கடிகாரம் அப்படியே உள்ளது.
இது குறித்த தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.ஜெயசந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.