மாணவிகளை செல்போனில் படம் பிடித்த மூன்று மாணவர்கள் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கூமாப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மூன்று மாணவிகளை படம் எடுத்த, பிளஸ் 2 மாணவர்கள் மூவர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
தற்போதைய செய்திகள்மாணவிகளை செல்போனில் படம் பிடித்த மூன்று மாணவர்கள் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கூமாப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மூன்று மாணவிகளை படம் எடுத்த, பிளஸ் 2 மாணவர்கள் மூவர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கூமாப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மூன்று மாணவிகளை படம் எடுத்த, பிளஸ் 2 மாணவர்கள் மூவர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
கூமாப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 1 வகுப்பில் படித்து வரும் 3 மாணவிகளை பிளஸ் 2 படிக்கும் சசிகுமார், பழனிக்குமார், சப்பாணிமுத்து ஆகியோர் பள்ளியில் நேற்று செல்போனில் படம் எடுத்தார்களாம்.
இது குறித்து மாணவிகள் தலைமை ஆசிரியை மேரி கிறிஸ்டினாளிடம் கூறியுள்ளார்கள். ஆனால் தலைமை ஆசிரியை மாணவர்களைக் கூப்பிட்டு கண்டிக்காமல், மாணவிகளிடம் நீங்கள் ஒழுக்கமாய் இருந்தால் எப்படி எடுப்பார்கள் என்று இவர்களை திட்டி அனுப்பினாராம்.
இது குறித்து மாணவிகள் பெற்றோரிடம் கூறியுள்ளார்கள். அவர்கள் சார்ந்துள்ள சமுதாயத்தினர் புதன்கிழமை கூமாப்பட்டியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர் போலீஸார் தலையிட்டு, பள்ளி நிர்வாகத்துடன் சேர்ந்து பேசி முடிக்கலாம் என்று கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டு பள்ளியில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
அதில் வட்டாட்சியர் ஐ.திரௌபதி, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் வைகுண்டபெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் மகேந்திரபாண்டியன் உள்ளிட்டோரும், பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இறுதியில் செல்போனில் படம் எடுத்த மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்காக காவல் துறையில் புகார் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கூமாப்பட்டி காவல் நிலையத்தில் மாணவிகள் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் சசிகுமார், பழனிக்குமார், சப்பாணிமுத்து ஆகிய மூன்று மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.