முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் பட்டாசு ஆலைகளில் மத்திய நிபுணர் குழு ஆய்வு

விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலைகளில் மத்திய நிபுணர்கள் 3 பேர் கொண்ட குழு இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தியது.

Updated On : 10 அக்டோபர், 2012 at 12:49 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:41 AM

விருதுநகர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் மத்திய நிபுணர்கள் 3 பேர் கொண்ட குழு இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தியது.

இன்று காலை விருதுநகர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆலோசனை நடத்திய மத்தியக் குழு, சிவகாசி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தியது.

சிவகாசியில் கடந்த மாதம் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 39 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, விபத்தில்லா பட்டாசு ஆலைகளை உருவாக்கவது குறித்து அறிக்கை அளிக்க மத்திய அரசு நிபுணர் குழுவை உருவாக்கியது.

Advertisement

அந்த நிபுணர் குழு இன்று விருதுநகர் மாவட்டம் வந்தது, பின்னர் பல பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று, பிரபல பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.