முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆசிரியர் கண்டித்ததால் தூக்குப் போட முயன்ற மாணவர்

விருதுநகர் மாவட்டம் பேரையூர் அருகே சாலிச்சந்தை என்ற இடத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர் குமார்(த/பெ:கருப்பண்ணன்). இவர், நேற்று காலை பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளார். இ

Updated On : 30 அக்டோபர், 2012 at 1:56 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:54 AM

விருதுநகர் மாவட்டம் பேரையூர் அருகே சாலிச்சந்தை என்ற இடத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர் குமார்(த/பெ:கருப்பண்ணன்). இவர், நேற்று காலை பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளார். இதனால் அவரை கண்டித்துள்ளார் ஆசிரியர் செல்வ லட்சுமி. மேலும் அவரது பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்றும் பள்ளிக்கு தாமதமாக வந்த குமாரிடம் ஆசிரியர் செல்வ லட்சுமி, ஏன் வீட்டில் இருந்து பெற்றோரை அழைத்து வரச் சொன்னேனே... எங்கே என்று கேட்டுள்ளார். அதனால் மனம் உடைந்த மாணவர் குமார், பள்ளிக்கு பின்புறமுள்ள பிற்பட்டோ நல விடுதிக்குப் பின்புறம் சென்று தூக்குப் போட்டுக் கொள்ள முயற்சி செய்துள்ளார்.

இதனைக் கண்ட பள்ளியின் சமையல்காரர், ஆபத்தான நிலையில் குமாரைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வு பெற்றோரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.