முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூர் துறைமுக முன்னெச்சரிக்கை நடவடிக்கை: டிஐஜி பார்வையிட்டார்

கடலூர் துறைமுக கடற்கரையோர கிராமப் பகுதியில் விழுப்புரம் சரக டிஐஜி சண்முகவேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

கடலூர் துறைமுக கடற்கரையோர கிராமப் பகுதியில் விழுப்புரம் சரக டிஐஜி சண்முகவேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டார்.

கடலூர் துறைமுகப் பகுதிக்கு டிஐஜி சென்ற போது துறைமுக பாதுகாப்பு அதிகாரி அன்பரசன் உடன் இருந்தார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிலம் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் காற்று வீசி வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடலூர் துறைமுகத்தில் நேற்று மாலை 5ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. அதே நிலை இன்று காலை வரை நீடிக்கிறது. காலை முதல் சாரல் மழையும், குளிர்ந்த காற்றும் வீசுகிறது. கடலூர் கடற்கரையோரங்களில் கடல் சீற்றமாகக் காணப்படுகிறது.

4வது நாளாக தொடர்ந்து இன்றும் கடலூர் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பள்ளிகளும், திருமண மண்டபங்களையும் மாவட்ட நிர்வாகம் தயார் படுத்தி வைத்துள்ளது.  உணவு வழங்கவும் உணவுப் பொருட்களை இருப்பு வைத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →