பண்ருட்டி அரசு மருத்துவமனையில் குழந்தை மரணம் : உறவினர்கள் போராட்டம்
பண்ருட்டி, செப்., 21 : பண்ருட்டி அருகே அங்குசெட்டி பாளையத்தைச் சேர்ந்த பழனி என்பவரது மனைவி ஜெயா (25), நேற்று பிரசவ வலி காரணமாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை ஜெயாவுக்
பண்ருட்டி, செப்., 21 : பண்ருட்டி அருகே அங்குசெட்டி பாளையத்தைச் சேர்ந்த பழனி என்பவரது மனைவி ஜெயா (25), நேற்று பிரசவ வலி காரணமாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை ஜெயாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், இன்று மதியம் 1 மணியளவில் குழந்தை உயிரிழந்துவிட்டது. இதனைக் கண்டித்து ஜெயா மற்றும் பழனியின் உறவினர்கள் சுமார் 25 பேர் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து சிகிச்சை அளித்த மருத்துவரிடம் விசாரித்ததில், குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும் போதே மலம் கழித்துவிட்டது. அது பெருமளவு குழந்தையின் வாய் மற்றும் மூக்குக்குள் சென்றுவிட்டதால், குழந்தையின் நிலைமை குறித்து, குழந்தை பிறந்ததுமே பெற்றோரிடம் விளக்கி கூறியிருந்தோம். குழந்தையை காப்பாற்ற எந்த அளவுக்கு முயற்சி செய்ய முடியுமோ அதை செய்தோம். எனினும் குழந்தையின் மூக்கு வழியாக சென்ற மலம், மூச்சுக் குழாயை அடைத்து குழந்தை இறந்துவிட்டது என்று கூறினார்.