முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், செப்., 21 : சிறு பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தி விதிமுறை மீறப்பட்டதாகக் கூறி மூடுவதை எதிர்த்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று ஆர்

Updated On : 26 செப்டம்பர், 2012 at 12:01 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:29 AM

விருதுநகர், செப்., 21 : சிறு பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தி விதிமுறை மீறப்பட்டதாகக் கூறி மூடுவதை எதிர்த்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஓம்சக்தி பட்டாசு ஆலையில் நடந்த விபத்துக்குப் பிறகு, அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சிவகாசியில் மட்டும் சுமார் 600 சிறு பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றில் ஆய்வு என்ற பெயரில் விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி அவற்றின் உரிமத்தை ரத்து செய்து, தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதை நிறுத்தக் கோரி சுமார் 400க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.