சிதம்பரம் அருகே கிணற்றில் விழுந்த முதலை மீட்பு
சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியின் கரையில் உள்ள கிணற்றில் 7 அடி நீள முதலை தவறி விழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனவர் பி.மணி, வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார், தோட்டக்காவலர் புஷ்பராஜ் ஆகியோர் கடலூரைச் சேர்ந்த வன உயிரின
சிதம்பரம் அருகே கிணற்றில் விழுந்த முதலையை வனத்துறையினர் மீட்டனர்.
சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியின் கரையில் உள்ள கிணற்றில் 7 அடி நீள முதலை தவறி விழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனவர் பி.மணி, வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார், தோட்டக்காவலர் புஷ்பராஜ் ஆகியோர் கடலூரைச் சேர்ந்த வன உயிரின சமூக ஆர்வலர் பூனம்சந்த் உதவியுடன் அரை மணி நேரம் போராடி முதலையை கிணற்றிலிருந்து மீட்டனர். பின்னர் அருகே உள்ள வக்காரமாரி நீர் தேக்க ஏரியில் கொண்டு முதலையை பத்திரமாக விட்டனர்.