முகப்பு
தற்போதைய செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை ஆரம்பம்: கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை

ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் அனுசரித்து வரும் கிறிஸ்துமஸ் பண்டியை தொடங்கும் அட்வெந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதையடுத்து வீடுகளில் இதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:03 PM
பகிர்:

ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் அனுசரித்து வரும் கிறிஸ்துமஸ் பண்டியை தொடங்கும் அட்வெந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதையடுத்து வீடுகளில் இதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளனர்.

இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தர்கள் உலகெங்கும் டிசம்பர் மாதம் 25-ம் நாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக அனுசரித்து வருகிறார்கள். திருச்சபையில் கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவதற்கு முந்தைய 4 ஞாயிற்றுக்கிழமைகளை, இயேசு கிறிஸ்து உலகத்தை நியாயந் தீர்க்க இரண்டாம் முறை வருவதை நினைவு கூறும் (அட்வெந்து ஞாயிறு) ஞாயிறுகளாக அனுசரிப்பார்கள். இந்த ஞாயிறு இன்று தொடங்கியது.

இதனையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எஸ்.ஐ. தூய தோமா ஆலயத்தில் அட்வெந்து முதலாம் ஞாயிறு ஆராதனை திருவிருந்து ஆராதனையாக நடைபெற்றது. சபைகுரு அருள்திரு கே.முத்துச்செல்வன் தேவ செய்தியளித்தார். ஆராதனையில் ஏராளமான திருச்சபையினர் கலந்து கொண்டனர். மேலும் கிறிஸ்தவர்களின் வீடுகளை கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் பாடல்கள் பாடிச் சென்று திருச்சபை மக்களின் வீடுகளை சந்தித்து பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் இரவு தொடங்கியது.

திருச்சபை மக்கள் கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் தங்களது வீடுகளை சுத்தம் செய்து, கிறிஸ்துமஸ் மரம், குடில் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →