முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி.யில் 8 கோழிகளை விஷம் வைத்து கொன்று, கொலை மிரட்டல்: ஒருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 8 கோழிகளை விஷம் வைத்துக் கொன்று, ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:05 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 8 கோழிகளை விஷம் வைத்துக் கொன்று, ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நாச்சியார்பட்டி, கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி நாயுடு மகன் ராஜேந்திரன் (50). இவர் வங்கார்பட்டி ரோட்டில், சேவல், கோழிகள் வைத்து வளர்த்து வருகிறார். அருகே பெருமாள்நாயுடு மகன் சுப்புராம் என்பவரின் புஞ்சை நிலம் உள்ளது. கோழிகள் அங்கு சென்று மேய்ந்துள்ளது.

அப்போது சுப்புராம், இனிமேல் கோழிகள் வந்து மேய்ந்தால் விஷம் வைத்து கொன்றுவிடுவேன் என்று கூறி எச்சரித்துள்ளார். திங்கள்கிழமை, சுப்புராம் புஞ்சை நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த கோழிகளுக்கு ஏதோ போட்டுள்ளார். இதனைப் பார்த்த ராஜேந்திரன் போய் விசாரித்துள்ளார். அப்போது சுப்புராம், ராஜேந்திரனை ஆபாசமாகப் பேசியுள்ளார்.

மேலும் நான் ஏற்கனவே சொன்னதுபோல் விஷம் கலந்த அரிசியை போடுகிறேன் என்று கூறினாராம். பதறிப்போய் கோழிகளை அங்கிருந்து ராஜேந்திரன் விரட்டியுள்ளார். சற்று நேரத்தில் ராஜேந்திரனின் 3 கோழிகள், 3 சேவல்கள் மற்றும் மாரியம்மாள் என்பவரின் 2 சேவர்கள் மயங்கி இறந்துள்ளது. மேலும் சுப்புராம், இன்று உன் கோழிகளுக்கு, நாளை நீ என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் செய்தார். போலிஸார் வழக்குப் பதிவு செய்து சுப்புராமை கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →