ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழா டிச.9-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சிதம்பரம் நகரில் மேலவீதி, தெற்குவீதி, கீழவீதி, வடக்குவீதி ஆகிய
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மார்காழி ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு தேரோடும் வீதிகளில் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழா டிச.9-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சிதம்பரம் நகரில் மேலவீதி, தெற்குவீதி, கீழவீதி, வடக்குவீதி ஆகிய வீதிகளில் நகராட்சி சார்பில் சனிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பெரும்பாலானோர் ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக் கொண்டனர். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.