முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோரிக்கை மாநாடு

மாவட்டத் தலைவர் அரசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, லெனின், வடமலை, தினேஷ், ஆசை, ரவி ஆகியோர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:09 PM
பகிர்:

சிதம்பரத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோரிக்கை மாநாட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் அரசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, லெனின், வடமலை, தினேஷ், ஆசை, ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் சங்க முன்னாள் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் எம்.அருள் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் சுனில்குமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். விழுப்புரம் மாவட்டச் செயலாளர் எஸ்.அறிவழகன், மாநிலக்குழு உறுப்பினர்

அனுசூயா, மாவட்ட துணைச் செயலாளர் ராயர் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர்.  மாணவர் சங்க மாநிலத் தலைவர் பி.உச்சிமாகாளி நிறைவு உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமரவேல் நன்றி கூறினார்.

கூட்டத்தில் அரசு பள்ளிகளை பாதுகாத்திட வேண்டும், கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை, நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும், மாவட்டத்தில் உள்ள காலியாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மடிக்கணினியை பயன்படுத்தி பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானக்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.