சுப்பிரமணியசாமி மீது நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் கோரிக்கை
பொதுமக்களால் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் முதல்வர் ஜெயலலிதாவை காஞ்சி சங்கராச்சாரியாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிய சுப்பிரமணியசாமி மீது தமிழ்நாடு அரசு
பொதுமக்களால் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் முதல்வர் ஜெயலலிதாவை காஞ்சி சங்கராச்சாரியாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிய சுப்பிரமணியசாமி மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு எம்ஜிஆர் அமைச்சரவையில் இருந்த முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பட்டப்பகலில் புனிதமான கோயிலுக்குள் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் விடுதலை செய்தால், அதற்குமேல் அரசு இருமுறை மேல்முறையீடு வழக்கு தொடரலாம். விடுதலைக்கு காரணம் சாட்சியம் இல்லை என்பதும், அரசு சாட்சிகள் பிரண்டதாலும்தான். கூலிப்படை நடத்திய கொலை வழக்கில் அனைவருக்கும் விடுதலை கிடைத்தது எப்படி என்பது குறித்தும், தீர்ப்பு முன்கூட்டியே தெரிந்து விமானத்தில் போக டிக்கட்கள் வாங்கப்பட்டுள்ளது குறித்தும் உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும்.
அரசு வழக்கு போதுவதற்கு, விடுதலையாவதற்கும் காவல்துறை பொறுப்பு. ஆனால் சுப்பிரமணியசாமி பகிரங்கமாக துணிச்சலுடன் சட்டத்தை ஜனநாயகத்தையும் அவமதிக்கிற வகையில் முதல்வர் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரை முதல்வராக தேர்வு செய்த வாக்காளர்களையும் அவமதிப்பதாகும். எனவே அவர் மீது தமிழகஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசரமும், அவசியமும் ஆகும் என வி.வி.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.