முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் அதிமுக மற்றும் பாஜகவினர் வெடி, வெடித்து கொண்டாட்டம்!

தமிழ்நாட்டில் ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை முன்னிட்டு அதிமுகவினரும், 4 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை முன்னிட்டும் சிதம்பரம் நகரில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:10 PM
பகிர்:

தமிழ்நாட்டில் ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை முன்னிட்டு அதிமுகவினரும், 4 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை முன்னிட்டும் சிதம்பரம் நகரில் அதிமுகவினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தனி, தனியே வெடி வெடித்து இனிப்பு வழங்கி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.

அதிமுக: சிதம்பரம் கீழரதவீதியில் அதிமுக நிர்வாகிகள் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமையில் வெடி, வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு வங்கித் தலைவரும், மாவட்ட இலக்கிய அணிச் செயலருமான சொ.ஜவகர், நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், தொகுதி இணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பாஜக: சிதம்பரம் கீழரதவீதி மற்றும் வடக்குமெயின்ரோட்டில் மாவட்ட வர்த்தக அணி பொதுச்செயலாளர் கே.ஜெயக்குமார் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் நகரத் தலைவர் ஆர்.திருமாறன், மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம், நகர பொறுப்பாளர் பால.ரவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் நடனம்பிள்ளை, விவசாய அணித் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், உ.வெங்கடேசதீட்சிதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.