வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்: வட்டாட்சியரை முற்றுகையிட்ட மக்கள்
சிதம்பரம் அருகே வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை வருவாய்த்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த நூறு பேர் வட்டாட்சியரை
சிதம்பரம் அருகே வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை வருவாய்த்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த நூறு பேர் வட்டாட்சியரை முற்றுகையிட்டனர். பின்னர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று வட்டாட்சியரை மீட்டு அழைத்து வந்தனர்.
சிதம்பரம் அருகே புவனகிரி அழிச்சிக்குடி பகுதியில் வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிச் செல்வதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சிதம்பரம் வட்டாட்சியர் எம்.விஜயா மற்றும் வருவாய்த்துறையினர் அழிச்சிக்குடி பகுதியில் உள்ள வெள்ளாற்றிற்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்ற போது அதே ஊரைச் சேர்ந்த சேகர் என்பவரது டிராக்டரில் மணல் அள்ளுவதை கண்டு டிராக்டரை பிடித்தனர். இத்தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள் சுமார் நூறு பேர் வட்டாட்சியரை முற்றுகையிட்டு டிராக்டரை விடுவிக்குமாறு வலியுறுத்தினர்.
இதனையடுத்து சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் புவனகிரி போலீஸார் அங்கு சென்று முற்றுகையிட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வெளாற்றில் அரசு அனுமதியின்றி யார் மணல் எடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இதனையடுத்து புவனகிரி போலீஸார் அனுமிதியின்றி் மணல் ஏற்றிய டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.