முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே கட்சி கொடிக் கம்பங்கள் சேதம்: போலீஸார் வழக்குப் பதிவு

சிதம்பரம் அருகே பெரியமேடு கிராமத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி கொடிக் கம்பங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து இரு

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

சிதம்பரம் அருகே பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கொடிக் கம்பங்கள் சேதம் குறித்து புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் அருகே பெரியமேடு கிராமத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி கொடிக் கம்பங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதேபோன்று அருகாமையில் உள்ள வண்டுராயன்பட்டு கிராமத்தில் காங்கிரஸ் கட்சி கொடிக்கம்பம் மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாக பாலு கொடுத்த புகாரி்ன் பேரில் புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து கட்சி கொடிக்கம்பங்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.