முகப்பு
தற்போதைய செய்திகள்

உள்ளூர் டீவி சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் புகார்

தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் ஒளிபரப்பும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் ஒளிபரப்பும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் வ.க.செல்லப்பன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் விபரம்:

சமீபகாலமாக சிதம்பரத்தில் சாதிய சண்டைகள் பெருமளவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சிதம்பரம் நகரில் இயங்கும் உள்ளூர் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், இழிவுப்படுத்தும் வகையில் வியாபார நோக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஒளிபரப்பி வருகின்றன. எனவே மேற்கண்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வ.க.செல்லப்பன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.