முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாதி புயல் சின்னம் உருவாகியுள்ளதை அடுத்து கடலூர் துறைமுகத்தில் வியாழக்கிழமை காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:13 PM
பகிர்:

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாதி புயல் சின்னம் உருவாகியுள்ளதை அடுத்து கடலூர் துறைமுகத்தில் வியாழக்கிழமை காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகி உள்ள மாதி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புயல் சின்னம் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடிக்க வேண்டாம் என்றும், கடலோரப் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

புயல் சின்னம் உருவானதை அடுத்து சிதம்பரம், கடலூர் பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் லேசான காற்றுடன் பரவலாக பழை பெய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.