தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய காவலாளியின் சடலம் மீட்பு
திருநெல்வேலி வண்ணார்பேட்டையைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் சுப்பிரமணியன் (42). பரணி நகரில் உள்ள ஒரு வீட்டில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். இவர், தனது உறவினர் ஒருவரின் விஷேசத்தில்
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் தாமிரவருணி ஆற்றில் வியாழக்கிழமை மூழ்கிய காவலாளியின் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் வெள்ளிக்கிழமை காலையில் மீட்டனர்.
திருநெல்வேலி வண்ணார்பேட்டையைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் சுப்பிரமணியன் (42). பரணி நகரில் உள்ள ஒரு வீட்டில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். இவர், தனது உறவினர் ஒருவரின் விஷேசத்தில் வியாழக்கிழமை பங்கேற்று விட்டு வண்ணார்பேட்டை தாமிரவருணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அவர், தண்ணீரில் மூழ்கினார்.
தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி வெட்டும்பெருமாள் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை மாலை வரை அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. இருள் சூழ்ந்ததால் மீட்புப்பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலையில் தீயணைப்பு வீரர்கள், சுப்பிரமணியனின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.