மகளிர் தாமே முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: அமைச்சர் எம்.சி.சம்பத்
மகளிர்கள் ஒதுங்கி இருக்காமல் தாங்களே முன்வந்து மார்கப் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த திட்டம் அம்மா திட்டத்தின் முக்கிய திட்டமாகும் என தமிழக வணிகவரி மற்றும்
மகளிர் ஒதுங்கி இருக்காமல் தாங்களே முன்வந்து மார்கப் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த திட்டம் அம்மா திட்டத்தின் முக்கிய திட்டமாகும் என தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம், திருச்சி டாக்டர் கே.சாந்தா மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளை ஆகியவை இணைந்து சிதம்பரம் அருகே மணலூர் எடிசன் ஜி.அகோரம் நினைவுப் பள்ளியில் இருநாள் மகளிருக்கான மார்பகப் புற்றுநோய் கண்டறியும் முகாமை நடத்துகிறது.
முகாமை சனிக்கிழமை தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் ரோட்டரி சங்கம் இது போன்ற மருத்துவ முகாம்களை நடத்துவதை பாராட்டுகிறேன். தமிழக முதல்வர் மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் வரை சிகிச்சைக்கான நிதி வழங்குகிறார். இதனை மகளிர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
முகாம் தொடக்கவிழாவிற்கு மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் வி.எஸ்.ராகவன் தலைமை வகிக்கிறார். பள்ளி தாளாளர் சி.ஷம்மிரத்னா முன்னிலை வகித்தார். காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகமாறன், அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் சொ.ஜவகர், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன், ரோட்டரி உதவி கவர்னர் வி.சிவப்பிரகாசம், சாந்தா மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி சசிதரன், அண்ணாமலைப் பல்கலை. கடல் அறிவியல் புல முதல்வர் கே.கதிரேசன், முன்னாள் தலைவர் பொறியாளர் ஆர்.எஸ்.ரவிச்சந்திரன், பொருளாளர் என்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மிட்டவுன் ரோட்டரி சங்க செயலர் எஸ்.ஆறுமுகம் நன்றி கூறினார். முகாமில் ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி தலைமையில் 8 பேர் கொண்டு மருத்துவக்குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் 47 பேர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.