ஸ்ரீநடராஜர் கோயில் தேர், தரிசனம்: சிதம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேர் மற்றும் மார்கழி ஆருத்ரா தரிசன நாட்களான டிச.17,18 தேதிகளில் நகரில் பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேர் மற்றும் மார்கழி ஆருத்ரா தரிசன நாட்களான டிச.17,18 தேதிகளில் நகரில் பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் ரா.மலைச்சாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேர் மற்றும் மார்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இருநாட்கள் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிச.17,18 தேதிகளில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு நகருக்குள் நுழைய அனுமதி கிடையாது. நான்கு சக்கர வாகனங்கள் உழவர் சந்தையில் நிறுத்த வேண்டும்.
கடலூரிலிருந்து வரும் பேருந்துகள் வண்டிகேட், பைசல்மஹால், வடக்குவீதி கஞ்சித்தொட்டி, பதினாறு கால்மண்டப தெரு, தேரடி பிள்ளையார் கோயில் தெரு, கமலீல்வரன் கோயில்தெரு, வேணுகோபால் பிள்ளைத்தெரு வழியாக பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
மயிலாடுதுறை மற்றும் காட்டுமன்னார்கோயிலிலிருந்து வரும் பேருந்துகள் நகர எல்லையில் உள்ள புறவழிச்சாலை வழியாக பைசல் மஹால், வடக்குவீதி கஞ்சித்தொட்டி, பதினாறு கால்மண்டப தெரு, தேரடி பிள்ளையார் கோயில் தெரு, கமலீல்வரன் கோயில்தெரு, வேணுகோபால் பிள்ளைத்தெரு வழியாக பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
பேருந்து நிலையத்திலிருந்து கடலூர், சென்னை செல்லும் பேருந்துகள் காந்திசிலை, ஆர்.டி.வேலு ஜங்ஷன், பச்சையப்பா ஜங்ஷன், மந்தரை, புறவழிச்சாலை வழியாக செல்ல வேண்டும். பேருந்து நிலையத்திலிருந்து சீர்காழி, மயிலாடுதுறை செல்லும் பேருந்துகள் காந்திசிலை, ஆர்.டி.வேலு ஜங்ஷன், பச்சையப்பா ஜங்ஷன், சீர்காழிரோடு வழியாக செல்ல வேண்டும்.
அண்ணாமலைநகரிலிருந்து வரும் நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும், ரயில்வே பீடர் ரோட்டின் ஓரங்களிலும் நிறுத்த வேண்டும். கண்ணங்குடி ரோடு வழியாக வரும் இரு சக்கர வாகனங்கள் அனந்தீஸ்வரன் கோயில்தெரு, சின்னகாஜியார்தெரு, விளங்கியம்மன் கோயில் தெரு, பெரியவாணியத்தெரு ஆகிய தெருக்களில் நிறுத்த வேண்டும். சீர்காழி ரோட்டிலிருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் வெல்லப்பிறந்தான்தெரு, லால்பேட்டைத்தெரு, மன்னார்குடி தெரு ஆகிய தெருக்களில் நிறுத்த வேண்டும். நான்குவீதிகளிலும் உள்ள நடைபாதைகளில் கடைகள் போடக்கூடாது. வணிகர்கள் தங்களகுக்கு கடைகளுக்கு வரும் சரக்கு லாரிகளை ஏற்றவே அல்லது இறக்கவோ முக்கியமாக நான்கு வீதிகளில் பகலில் அனுமதி கிடையாது.
போக்குவரத்து மாற்றம் குறித்து வாகனம் மற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ரா.மலைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆர்.ஞானசேகரன், தலைமைக்காவலர் சுதாகர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை துண்டு பிரசுரங்களை வழங்கினர்.