முகப்பு
தற்போதைய செய்திகள்

கொரியா சென்று படிக்க மாணவர்களுக்கு உத்தரவு வழங்கும் விழா

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகமும், கொரியா சூங்சிங் பல்கலைக்கழகமும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மூன்று மாணவர்கள் கொரியா சென்று படிப்பதற்கான உத்தரவு வழங்கும் விழா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:23 PM
பகிர்:

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகமும், கொரியா சூங்சிங் பல்கலைக்கழகமும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மூன்று மாணவர்கள் கொரியா சென்று படிப்பதற்கான உத்தரவு வழங்கும் விழா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள், கொரியா சூங்சிங் பல்கலைக்கழகத்தில் பி.டெக். ஒராண்டு சென்று படிப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ஆண்டுதோறும் ஒரு செமஸ்டர் அல்லது ஓராண்டு கொரியா சென்று மாணவர்கள் தங்கள் படிப்பை அதே துறையில் தொடரலாம். இறுதியாண்டு இங்கு வந்து படிப்பார்கள். இந்த ஆண்டு இ.சி.இ. மூன்றாம் ஆண்டு மாணவர் ரவிச்சந்திர திவாகர், சிவல் துறை மாணவர்கள் ஜி.எ.அகில் அண்ணாமலை, எஸ்.சித்தையா ஆகியோர் எவ்வித கட்டணமும் இன்றி கொரியா சென்று படிப்பதற்கான உத்தரவை வேந்தர் க.ஸ்ரீதரன் வழங்கி மாணவர்களை பாராட்டினார்.

அப்போது உடன் துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன், துணைப் பதிவாளர் பி.ஜி.குருசாமிபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →