முகப்பு
தற்போதைய செய்திகள்

அடையாளம் தெரியாத பெண் சடலம்: போலீஸார் விசாரணை

சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி-அலவாக்கோட்டை சாலை பிரிவு அருகே முள் புதர் ஒன்றில்  சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் எலும்புக்கூடாக இருப்பதாக போலீஸாருக்கு தகவல்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், அலவாக்கோட்டை பிரிவு அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி-அலவாக்கோட்டை சாலை பிரிவு அருகே முள் புதர் ஒன்றில்  சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் எலும்புக்கூடாக இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தின் அருகே கருப்புநிற சேலையும், கருப்பு நிற ஜாக்கெட், கருப்புநிறத்தில் தலைமுடியும் காணப்பட்டது. இருபதிலிருந்து முப்பது தினங்களுக்கு முன் இறந்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். சடலம் எலும்புக்கூடாக ஆனதால் இறந்து போனவர் யார் என்ன என்ற விவரம் தெரியவில்லை. இதனால் இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் காணாமல் போன பெண்கள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்து மதகுபட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments