ராஜபட்ச வருகையைக் கண்டித்து திண்டிவனத்தில் உருவ பொம்மை எரிப்பு
திண்டிவனம் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகம் முன்புள்ள நேரு வீதியில், இலங்கை அதிபர் ராஜபட்ச உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
திண்டிவனம் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகம் முன்புள்ள நேரு வீதியில், இலங்கை அதிபர் ராஜபட்ச உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
இலங்கை அதிபர் ராஜபட்ச திருப்பதி கோயிலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் போது இலங்கை அதிபருக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது. நேரு வீதியில் நடைபெற்ற இச்சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.