முகப்பு
தற்போதைய செய்திகள்

சாலை விபத்துக்களில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி

தமிழகத்தில் பல்வேறு சாலை விபத்துக்களில் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

தமிழகத்தில் பல்வேறு சாலை விபத்துக்களில் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரைச் சேர்ந்த வேலு என்பவர் 23.12.2012 அன்று குன்றத்தூர் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், ராணிப்பேட்டை, நாவல்பூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் சுகுமார் 26.12.2012 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், திம்மசமுத்திரம் கிராமம் அருகே சாலையைக் கடக்க நின்றிருந்த போது, காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சாலை விபத்துகளில் அகால மரணமடைந்த வேலு மற்றும் சுகுமார் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →