வி.பி.எம்.எம். கல்வி அறக்கட்டளை சார்பில் 15-வது பாவை நிறைவு விழா
கிருஷ்ணன்கோவிலில் உள்ள வி.பி.முத்தையாபிள்ளை-மீனாட்சியம்மாள் மகளிர் கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் இந்த திருப்பாவை-திருவெம்பாவை விழா வியாழக்கிழமை தொடங்கி இன்று முடிய நடைபெற்றது. இதனையொட்டி பல்வேறு ஆன்மீக
தற்போதைய செய்திகள்வி.பி.எம்.எம். கல்வி அறக்கட்டளை சார்பில் 15-வது பாவை நிறைவு விழா
கிருஷ்ணன்கோவிலில் உள்ள வி.பி.முத்தையாபிள்ளை-மீனாட்சியம்மாள் மகளிர் கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் இந்த திருப்பாவை-திருவெம்பாவை விழா வியாழக்கிழமை தொடங்கி இன்று முடிய நடைபெற்றது. இதனையொட்டி பல்வேறு ஆன்மீக
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். கல்வி அறக்கட்டளை மற்றும் வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய 15-வது பாவை விழா வியாழக்கிழமை கோலாகலமாக தொடங்கி, இன்று நிறைவு அடைந்தது.
கிருஷ்ணன்கோவிலில் உள்ள வி.பி.முத்தையாபிள்ளை-மீனாட்சியம்மாள் மகளிர் கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் இந்த திருப்பாவை-திருவெம்பாவை விழா வியாழக்கிழமை தொடங்கி இன்று முடிய நடைபெற்றது. இதனையொட்டி பல்வேறு ஆன்மீக சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிறைவு விழா, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் கல்யாணி மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர் கோ.சங்கரம்மாள் வரவேற்றார். கோவை, பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி துறைத் தலைவர் பி.முரளி வாழ்த்துரை வழங்கினார். பின்னர் பத்மஸ்ரீ கலைமாமணி சீர்காழி கோ.சிவசிம்பரம் மற்றும் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலையில், மதுரை, தமிழ்நாடு வர்த்தகச் சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஓம்சக்தி ஹஸ்பிட்டாலிட்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.ஆர்.திருபொன்ராஜ், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் பி.ஜெயராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சென்னை கலாசாதனாலயா நடனமாமணி இசைச்செல்வர், நாட்டியகலாசிகாமணி ரேவதி ராமச்சந்திரன் குழுவினரின் மார்க்கம் என்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர், துணைத் தலைவர் வி.பி.எம்.எஸ்.தங்கபிரபு, தாளாளர் பழனிச்செல்வி, இணைத் தாளாளர் வி.பி.எம்.எஸ்.துர்காமீனலோஷினி, வாலாஜாபேட்டை எம்.எம்.குரூப்ஸ் தலைவர் டபிள்யூ.மகேந்திரவர்மன், இயக்குநர் எம்.கமல்ராகவன், சிந்துஜா மற்றும் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவிகள், ஏராளமான பெற்றோர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.