முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை 215 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 83 ஆயிரத்து 860 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதரன் வழங்கினார்.ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் த.ந.ஹரிரஹன்

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை 215 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 83 ஆயிரத்து 860 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதரன் வழங்கினார்.ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் த.ந.ஹரிரஹன் முன்னிலையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டது.

102 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 18 பேருக்கு முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமக்கிரியை உதவித் தொகை, நலிந்தோர் உதவித் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு உதவி, 50 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு, 20 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, 10 பயனாளிகளுக்கு விலையில்லா வேஷ்டி, சேலைகள் ஆகிய அரசின் நலத்திட்ட உதவிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதரன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜூ, கோட்டாட்சியர்கள் ரெங்கன், குணசேகரன், துணை ஆட்சியர் (சிறப்புத் திட்டங்கள்) ஜெயஸ்ரீ, தனித் துணை ஆட்சியர் மேரிபாய், உதவி இயக்குநர் பீபிஜான், வட்டாட்சியர் ஐ.திரௌபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →