முகப்பு
தற்போதைய செய்திகள்

சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கணக்கில் வராத ரூ.16 ஆயிரம் பறிமுதல்

தேனி மாவட்டம் கம்பம்மெட்டு பகுதியில் தற்காலிகக் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.

Updated On : 13 ஜனவரி, 2013 at 9:49 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:32 PM

தேனி மாவட்டம் கம்பம்மெட்டு பகுதியில் தற்காலிகக் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. இங்கே லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் என சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைச் சாவடி, சபரி மலை செல்லும் பக்தர்களை கணக்கில் கொண்டு, அண்மையில் திறந்துவைக்கப்பட்டது. 

வட்டார போக்குவரத்துத் துறையின் சார்பில் தற்காலிகமாக இந்தச் சாவடி அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்தச் சோதனைச்சாவடியில் மேற்கொள்ளப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில், கணக்கில் வராத ரூ.16,300 கைப்பற்றப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.