இளம் பெண்ணை ஏமாற்றி குடும்பம் நடத்திவிட்டு தலைமறைவான பொறியியல் மாணவர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், சாத்தூர், சாமியார் காலனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் சுந்தரேஸ்வரன் (24). இவர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் (M.E.) இரண்டாம் ஆண்டு படித்து
தற்போதைய செய்திகள்இளம் பெண்ணை ஏமாற்றி குடும்பம் நடத்திவிட்டு தலைமறைவான பொறியியல் மாணவர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், சாத்தூர், சாமியார் காலனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் சுந்தரேஸ்வரன் (24). இவர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் (M.E.) இரண்டாம் ஆண்டு படித்து
ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண்ணை ஏமாற்றி குடும்பம் நடத்திவிட்டு தலைமறைவான பொறியியல் முதுகலை மாணவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர், சாமியார் காலனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் சுந்தரேஸ்வரன் (24). இவர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் (M.E.) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதே இடத்தைச் சேர்ந்தவர் இருளப்பன் மகள் விஜயலட்சுமி (17). இவர்கள் இருவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. சுந்தரேஸ்வரன், விஜயலட்சுமியிடம் ஆசை வார்த்தை கூறி, ஸ்ரீவில்லிபுத்தூர், தெற்குரத வீதியில் உள்ள அன்னை பாரா மெடிக்கல் நிறுவனத்தில் டிப்ளமா இன் நர்ஸிங் சேர்த்துவிட்டுள்ளார். மேலும் விஜயலட்சுமியிடம் உடன் படிக்கும் 5 மாணவிகளுடன் தனியே வீடு எடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து படிக்கப்போவதாக கூறி, அவரது தந்தையிடம் அனுமதி பெற்றுள்ளார். ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனியே வீடு எடுத்து கடந்த ஒன்னறை ஆண்டுகளாக சுந்தரேஸ்வரனும், விஜயலட்சுமியும் குடும்பம் நடத்திக் கொண்டு படித்து வந்துள்ளனர்.
கடந்த 6 மாதத்திற்கு முன்னர் இந்த விஷயம் விஜயலட்சுமியின் தந்தைக்கு தெரியவந்துள்ளது. அவர் சுந்தரேஸ்வரன் வீட்டில் போய் சப்தம் போட்டுள்ளார். அப்போது சமரசமாய் போய்விடுவோம். என் மகள் திருமண வயதை அடையவில்லை. வயது அடைந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பேசி முடித்துள்ளார்கள். மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவாதால் அதே வீட்டில் இருந்து படிக்கவும் சம்மதித்துள்ளனர்.இதற்கிடையே சுந்தரஸ்வரன், விஜயலட்சுமியிடம் நீ டிப்ளமா படிக்கிறாய், நான் முதுகலை பொறியியல் படிக்கிறேன். நமக்கு படிப்பு ஒத்துப்போகாது பிரிந்து கொள்வோம் என்று கூறிவந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி, புராஜெக்ட் வேலை இருப்பதால் சென்று வருகிறேன் என்று கூறிச் சென்ற சுந்தரேஸ்வரன் வீடு திரும்பவில்லையாம். இதனையடுத்து கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாகச் சென்ற விஜயலட்சுமி, சுந்தரேஸ்வரனின் துறைத் தலைவரிடம் நடந்த சம்பவத்தைக் குறித்து முறையிட்டுள்ளார். என்னோடு சேர்ந்து திருமணம் செய்து வாழாவிட்டால் தீக்குளித்துவிடுவேன் என்றும் கூறி வந்துள்ளார். இதனை அறிந்த சுந்தரேஸ்வரன், தன்னைப் பார்க்க யார் வந்தாலும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று பல்கலைக்கழக கேட்டில் தபால் கொடுத்துவைத்துவிட்டாராம். இதனால் மீண்டும் விஜயலட்சுமி போனபோது, பல்கலைக்கழகத்திற்குள் செல்ல முடியவில்லையாம்.
இதனையடுத்து விஜயலட்சுமி, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னை ஏமாற்றி சுமார் ஒன்னறை ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு, தற்போது தலைமறைவாக உள்ள சுந்தரேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று புகார் செய்தார். போலீஸார் தலைமறைவாக உள்ள சுந்தரேஸ்வரனை தேடி வருகிறார்கள்.