ஸ்ரீவில்லிபுத்தூரில் டிப்பர் லாரி-வேன் மோதல்: 8 பேர் காயம்
ராஜபாளையம் அருகேயுள்ள தளாவாய்புரம், புனல்வேலியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மாரியப்பன் (35) மற்றும் உறவினர்கள் ஒரு வேனில் சென்னையில் நடைபெற்ற திருமணத்திற்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கிருஷ்ணன்கோவில்-
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் டிப்பர் லாரி-வேன் மோதல்: 8 பேர் காயம்
ராஜபாளையம் அருகேயுள்ள தளாவாய்புரம், புனல்வேலியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மாரியப்பன் (35) மற்றும் உறவினர்கள் ஒரு வேனில் சென்னையில் நடைபெற்ற திருமணத்திற்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கிருஷ்ணன்கோவில்-
ஸ்ரீவில்லிபுத்தூர் டிப்பர் லாரியும் வேனும் மோதிக் கொண்டதில் திருமணதிற்கு சென்று வந்த கோஷ்டியைச் சேர்ந்த 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
ராஜபாளையம் அருகேயுள்ள தளாவாய்புரம், புனல்வேலியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மாரியப்பன் (35) மற்றும் உறவினர்கள் ஒரு வேனில் சென்னையில் நடைபெற்ற திருமணத்திற்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கிருஷ்ணன்கோவில்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரியுடன் வேன் நேருக்கு நேர் மோதியது. இதில் வேனில் வந்த ஜெயலட்சுமி (30), கி.மாரியப்பன் (35), வீரம்மாள் (40), கா.சௌந்திரபாண்டி (30), க.குருசாமி (32), ரா.காளிராஜ் (35), ச.மணிகண்டன் (4), மகேஷ்வரி (9) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் ரா.பேச்சிமுத்துவை கைது செய்தனர்.