பாஜக ரமேஷ் கொலை: கண்டித்து ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரத்தில் கடைகள் அடைப்பு.
ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதியஜனதா கட்சி இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடு்த்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் பகுதிகளில் உள்ள வணிகர்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தங்களது கடைகளை அடைத்தனர். இதனால் இப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் படப்பை ஒரகடம் ஆகிய பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
அனுமதியின்றி ஆர்பாட்டம் பாஜகவினர் கைது:
பாஜக பொதுசெயலாளர் ஆடிட்டர் ரமேஷ்படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சுங்குவார்சத்திரம் பகுதியில் காவல் துறையின் அனுமதியின்றி காஞ்சிபுரம் மாவட்ட பாஜக செயலாளர் பாபு தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட பஜாகவினர் ஆர்பாட்டம் நடத்தினர். இதையடுத்து ஆர்பாட்டம் நடத்தியவர்களை சுங்குவார்சத்திரம் போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.