முகப்பு
தற்போதைய செய்திகள்

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்வு: கடனாநதி அணை 2 முறை நிரம்பியது

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்துவருகிறது.இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 47 மி.மீ மழையும், பாபநாசம் கீழ்அணையில் 20 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:56 PM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் இன்று பிற்பகலில் 84.50 அடியை எட்டியது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்துவருகிறது.இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 47 மி.மீ மழையும், பாபநாசம் கீழ்அணையில் 20 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 15 மி.மீ மழையும்,மணிமுத்தாறு அணை பகுதியில் 18.6 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 9 மி.மீமழையும், ராமநதி அணையில் 6 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.இதேபோல் சேரன்மகாதேவியில் 3 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 8.4மி.மீ மழையும் பெய்துள்ளது. மழை நீடித்து வருவதால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக வந்து கொண்டிருந்தது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 85 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையின் நீர்மட்டம் 84.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 350 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 850 கனஅடி தண்ணீர் கருணை அற்றில் திறந்து விடப்படுகிறது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2778.73 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 122.40 அடியாக இருந்தது. அணையில் இருந்து 1550கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 6அடி உயர்ந்து 130.13 அடியாக இருந்தது.மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 283 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில்இருந்து 175 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 62.50அடியாக இருந்தது. ராமநதி அணையின் நீர்மட்டம் 79.75 அடியாக இருந்தது.அணைக்கு விநாடிக்கு 80 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →