100 நாள் வேலை திட்டத்தில் ரூ.5.80 காசு கூலி வழங்கியதை கண்டித்து போராட்டம்
பண்ருட்டி ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.5.80 காசுகள் கூலி வழங்கியதைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
பண்ருட்டி ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.5.80 காசுகள் கூலி வழங்கியதைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
பண்ருட்டி ஒன்றியம், அழகப்பசமுத்திரம் பஞ்சாயத்து, கானஞ்சாவடி கிராமத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சுடுகாட்டுப் பாதையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணியில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கு நேற்று ஒரு நபருக்கு ரூ.5.80 காசுகள் கூலி வழங்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பெண் தொழிலாளர்கள் உட்பட சுமார் 50க்கும்மேற்பட்டோர் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.