முகப்பு
தற்போதைய செய்திகள்

கடையநல்லூரில் கணவன் - மனைவி தீக்குளிக்க முயற்சி

துப்புரவுப் பணியாளர் தேர்வுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலைக்கு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கணவன் மனைவி இருவரும் கடையநல்லூர் நகராட்சி அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:24 PM
பகிர்:

துப்புரவுப் பணியாளர் தேர்வுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலைக்கு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கணவன் மனைவி இருவரும் கடையநல்லூர் நகராட்சி அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

கடையநல்லூரைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமி (37), வசந்தி (32).

வசந்திக்கு துப்புரவுப் பணியாளர் பணியிடத்துக்கு நேர்முகத்துக்கான அழைப்பு வந்து, 10 நாட்களுக்கு முன்னர் அதில் கலந்து கொண்டார். ஆனால், அவருக்கு பணியிடம் வழங்கப்படும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதை அடுத்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த படி, பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால், இது நடக்கவில்லை என்பதால், இன்று கணவன் மனைவி இருவரும் நகராட்சி அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி செய்தனர். காவல் ஆய்வாளர் சபாபதி அவர்களைத் தடுத்து அனுப்பினார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →