முகப்பு
தற்போதைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடிப்பு: ராமநதி அணை நிரம்பியது

நிகழ் பருவத்தில் தென்மேற்கு பருவ மழை நீடித்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:25 PM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.இன்று மாலை 4 மணிக்கு 84அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நிரம்பியதை அடுத்து உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது.

நிகழ் பருவத்தில் தென்மேற்கு பருவ மழை நீடித்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.இன்றைய மாலை 4 நிலவரப்படி 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின்நீர்மட்டம் 83.00 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த120 கனஅடி உபரி நீர் ராமநதி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தென்மேற்குபருவ மழைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் முதலாவதாக ராமநதி அணை நிரம்பியுள்ளது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 95.15 அடியாக இருந்தது.அணைக்கு விநாடிக்கு 1,300 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு 1004.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 109.25 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,300 கனஅடி நீர்வரத்து இருந்தது.மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70.65 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு130 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு 275 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 71.00அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 280 கனஅடி நீர்வரத்து இருந்தது.

பதிவான மழை அளவு: பாபநாசம் அணையில் 11 மி.மீ, பாபநாசம் கீழ் அணையில் 4மி.மீ, சேர்வலாறு அணையில் 10 மி.மீ, மணிமுத்தாறு அணையில் 8.4 மி.மீ,அம்பாசமுத்திரத்தில் 2.4 மி.மீ, கடனாநதி அணையில் 6 மி.மீ, ராமநதி அணையில்4 மி.மீ. இன்று பகலில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின்நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி: கடந்த 2012 ல் தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால் தாமிரவருணி பாசனத்தில் கார் பருவம் சாகுபடி செய்யவில்லை. வடகிழக்கு பருவமழையும் சரிவர பெய்யாததால் பிசான பருவமும் முழுமையாக சாகுபடி செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. அணைகளின் நீர் இருப்பு குறைந்து காணப்பட்டது.இதனிடையே பருவ மழை பெய்து வருவதால் இம்மாவட்ட அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருவது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →