காரைக்கால் மீனவர்கள் 4 பேர் மீது இலங்கைக் கடற்படை கண்மூடித்தனமான தாக்குதல்
காரைக்காலில், காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் காசிநாதன், சித்ரவேல், சந்திரகுமார், முருகையன், பிரகாஷ்
காரைக்காலில், காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் காசிநாதன், சித்ரவேல், சந்திரகுமார், முருகையன், பிரகாஷ் ஆகிய 5 பேரும் காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் கோடியக்கரையிலிருந்து 5 பாகம் கடல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்களின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி, அவர்களின் கைகளைக் கட்டி, அவர்களை கட்டையால் அடித்து, பின்னர் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டிச் சென்றனராம். படுகாயங்களுடன் இன்று அதிகாலை அவர்கள் காரைக்கால் கரை திரும்பினர். அவர்களில் பிரகாஷ் தவிர்த்த மற்ற 4 மீனவர்களும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.