முகப்பு
தற்போதைய செய்திகள்

தீயணைப்புக் கருவியை வெடிகுண்டாக சித்திரித்து விஷமிகள் ஏற்படுத்திய பரபரப்பு!

கடலூரில் புதுச்சேரி சாலையில் உட்லண்ட்ஸ் சிக்னல் அருகே சிலிண்டர் வடிவத்தில் இருந்த இரண்டு பார்சல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவை வெடிகுண்டாக இருக்கலாம் என்று பீதி கிளம்பியதால், போலீஸாருக்கு தகவல் தரப்பட்டது. அவற்றை சில்வர் பீச்சுக்கு எடுத்துச் சென்ற போலீஸார், வெடிகுண்டு

Updated On : 8 மே, 2013 at 2:22 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:10 PM

கடலூரில் புதுச்சேரி சாலையில் உட்லண்ட்ஸ் சிக்னல் அருகே சிலிண்டர் வடிவத்தில் இருந்த இரண்டு பார்சல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவை வெடிகுண்டாக இருக்கலாம் என்று பீதி கிளம்பியதால், போலீஸாருக்கு தகவல் தரப்பட்டது. அவற்றை சில்வர் பீச்சுக்கு எடுத்துச் சென்ற போலீஸார், வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்குழுவுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து, பாதுகாப்புடன் அவற்றை சோதனை செய்ததில், அவை தீயணைப்புக் கருவிகளே என்றும், தீயணைப்புக் கருவிகளை வெடிகுண்டுகள் போல் தெரியும் வண்ணம் பேப்பர் சுற்றப்பட்டு பார்சல் கட்டி வைத்துள்ளனர் என்றும் தெரியவந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் கடலூர் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.