முகப்பு
தற்போதைய செய்திகள்

கரும்பு காட்டில் தீவிபத்து

கோபியை அடுத்த காசிபாளையம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன்(48). விவசாயி. இவரது தோட்டத்தில் 4 ஏக்கர் பரப்பளவிற்கு கரும்பு பயிரிட்டிருந்தார். கரும்பு நன்கு முற்றிய நிலையில் அறுவடைக்குத் தயாராக இருந்தது. இந்நிலையில் இவரது கரும்பு காட்டில்  நேற்று(சனிக்கிழமை)

Updated On : 12 மே 2013, 4:23 pm IST
பகிர்:

கோபி அருகே கரும்பு காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில்  ரூ.45 ஆயிரம் மதிப்புள்ளவை எரிந்து சேதம்.

கோபியை அடுத்த காசிபாளையம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன்(48). விவசாயி. இவரது தோட்டத்தில் 4 ஏக்கர் பரப்பளவிற்கு கரும்பு பயிரிட்டிருந்தார். கரும்பு நன்கு முற்றிய நிலையில் அறுவடைக்குத் தயாராக இருந்தது. இந்நிலையில் இவரது கரும்பு காட்டில்  நேற்று(சனிக்கிழமை) திடீரென தீபிடித்துக் கொண்டது.உடனடியாக கோபி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய பொறுப்பு அதிகாரி ராஜன் தலைமையிலான தீதடுப்புக் குழுவினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீவித்தால் 1 ஏக்கர் பரப்பளவிற்கு பயிரிடப்பட்டிருந்த ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள கரும்பு எரிந்து சேதமடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.