தற்போதைய செய்திகள்

கோபன்ஹேகன் மணல் சிற்பப் போட்டியில் இந்தியக் கலைஞர் சுதர்சனுக்கு முதல் பரிசு

கோபன்ஹேகனில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்பப் போட்டியில் இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் முதல் பரிசை வென்றுள்ளார். டென்மார்க் தலைநகர்

விஜயாகண்ணன்

கோபன்ஹேகனில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்பப் போட்டியில் இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் முதல் பரிசை வென்றுள்ளார். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் ஆண்டுதோறும் சர்வதேச மணல் சிற்பப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில் இந்தியா உள்பட 17 நாடுகளைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர்கள் பங்கேற்றனர். இதில், ஒடிசாவைச் சேர்ந்த பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய மணல் சிற்பத்தை  அமைத்திருந்தார். "கோ கிரீன், சேவ் எர்த்' (பசுமையை மேம்படுத்தி, உலகைக் காப்போம்) என்ற பெயரிலான, 15 அடி உயரம் கொண்ட சிற்பத்தை அவர் 7 தினங்களில் உருவாக்கினார். அவரது சிற்பத்துக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காற்று மாசு: அலுவலக நேரங்களை மாற்றிய குருகிராம் அரசு நிா்வாகம்

வரதட்சிணைக் கொடுமை வழக்கில் மைத்துனா் விடுவிப்பு

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு ரூ.68.74 லட்சம் இழப்பீடு!

ஈரானிய பெண்ணின் பணப் பையிலிருந்த 1,600 அமெரிக்க டாலா்கள் திருட்டு! பேருந்து உதவியாளா் கைது!

வாகன திருட்டு வழக்கில் ரூ.3 லட்சம் லஞ்சம்: ஏஎஸ்ஐ கைது

SCROLL FOR NEXT