சாலைத் தடுப்புச் சுவரில் மோதி பைக்கில் சென்றவர் உயிரிழப்பு
தேனியில் தேனி-மதுரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர், சாலைத் தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:21 PM
தேனியில் தேனி-மதுரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர், சாலைத் தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தார்.
கோடாங்கிபட்டியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ஜெயக்குமார்(32), இதே ஊரைச் சேர்ந்த தர்மர்(48) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கோடங்கிப்பட்டியில் இருந்து கருவேல்நாயக்கன்பட்டி நோக்கிச் சென்றனர். வாகனத்தை ஜெயக்குமார் ஓட்டிச் சென்றுள்ளார். தேனி-மதுரை சாலையில் தனியார் பள்ளி அருகே நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் ஜெயக்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார். தர்மர் காயமடைந்தார். இந்த விபத்து குறித்து தேனி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.