பண்ருட்டி மணல்குவாரியை முற்றுகையிட முயன்றவர்கள் விரட்டியடிப்பு
பண்ருட்டியில் மணல் குவாரியை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர்.
பண்ருட்டியில் மணல் குவாரியை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர்.
பண்ருட்டி கண்தர கோட்டையில், தென்பேண்ணை ஆற்றில் மணல் குவாரி இயங்கி வருகிறது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் சின்னக் கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 4 லாரிகளில் மணல் எடுத்துக் கொண்டு சென்றனர். அப்போது அப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் மாவட்ட கோட்டாட்சியர் ஆய்வு செய்ததில் அனுமதி சீட்டு இல்லாமல் மணல் எடுத்துச் செல்வதாகக் கூறி வாகனத்தை பறிமுதல் செய்தார்.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர்கள், உங்கள் குவாரிகளில் தானே மணல் எடுத்துச் சென்றோம். எனவே நீங்கள் தான் முயற்சி செய்து லாரிகளை மீட்டுத் தர வேண்டும் என்று கூறினார். ஆனால் அதற்கு குவாரி நிர்வாகத்திடம் சரியான பதில் இல்லை.
இதையடுத்து சின்னகள்ளிப்பட்டு கிராமத்தினர் 25 பேர் இன்று மணல் குவாரியை முற்றுகையிட்டு மணல் எடுக்க விடாமல், லாரிகளை மீட்டுக் தரக் கோரி போராட்டம் நடத்த முயன்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து பண்ருட்டி டிஎஸ்பி கிருஷ்ணசாமி தலைமையில் காவல்துறையினர் முற்றுகையிட்டவர்களை விரட்டியடித்து அதில் 6 பேரை மட்டும் கைது செய்து புதுப்பேட்டை காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.