தற்போதைய செய்திகள்

நூலக புரவலர் சேர்க்கையில் ஆலங்குளம் நூலகம் மாவட்டத்தில் முதலிடம்

உலக புத்தக தினத்தை முன்னிட்டு நடந்த நூலக புரவலர் சேர்க்கையில்,ஆலங்குளம் நூலகம் அதிக புரவலர்களை சேர்த்து மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்தது.

ராமச்சந்திரன்

உலக புத்தக தினத்தை முன்னிட்டு நடந்த நூலக புரவலர் சேர்க்கையில்,ஆலங்குளம் நூலகம் அதிக புரவலர்களை சேர்த்து மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்தது.

இது குறித்து ஆலங்குளம் கிளை நூலகர் அ.பழனீஸ்வரன் கூறியதாவது:

தமிழக அரசின் கல்வி அமைச்சர் உத்தரவையொட்டி,உலக புத்தக தினத்தை முன்னிட்டு 23.4.2013 முதல் 22.5.2013 வரை,அதிகளவில் உறுப்பினர்கள் மற்றும் புரவலர்கள் சேர்க்கை ஆலங்குளம் நூலகத்தில் நடைபெற்றது.

இதில் ரூ.1000 செலுத்தி நூலகத்தில் 50 பேர் புரவலர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.இது மாவட்ட அளவில் முதலிடமாகும்.மொத்தம் ஆலங்குளம் நூலகத்தில் 135 பேர் புரவலர்களாகவும்,3120 பேர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்ததால்,ஆலங்குளம் நூலக பணியாளர்களையும் , வாசகர் வட்ட தலைவர் கே.எஸ்.தங்கசெல்வம் ஆகியோரையும் மாவட்ட நூலக அலுவலர் சு.மந்திரம் பாராட்டினார் என்றார் அவர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT